சென்னையில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் வாக்குறுதிகளின்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் சென்னைக்குச் செல்ல முயன்றனர். இதற்காக நேற்று இரவு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த செவிலியர்களை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், இரவு முழுவதும் கொசுக்கடியில் அமர வைக்கப்பட்டதாகச் செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தி பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு மற்றும் சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற செவிலியர்கள் கைது
சென்னையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற செவிலியர்கள் கைது செய்யப்பட்டு கொசுக்கடியில் இரவு முழுவதும் தவித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




