சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழகத்தின் மண்ணில் கால்பதித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளைஞர்களின் உற்சாகத்தில் நாட்டின் எதிர்காலம் தெரிவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, இளைஞர்கள் புதிய சிந்தனைகளுடன் செயல்பட்டு, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகம் பல்வேறு தீர்வுகளைத் தேடும் நிலையில், அவற்றை வழங்கும் திறன் இந்திய இளைஞர்களுக்கு இருப்பதாகக் கூறினார். திருவள்ளுவரின் திருக்குறள் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார். பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை பாடல் அச்சமின்றி வாழ உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து தமிழ் கலாசாரம், பாரம்பரியம், இலக்கியம் ஆகியவற்றைப் பிறரிடம் பகிர வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விளையாட்டுத் துறையின் வளர்ச்சி குறித்தும் பேசினார். மேலும், 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளையும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான இலக்குகள் குறித்தும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழ் மொழி கலாச்சாரத்தை பரப்புங்கள் - பிரதமர் மோடி
சென்னை பள்ளி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இளைஞர்களின் கனவு, கல்வி வளர்ச்சி, தமிழ் கலாசாரம் குறித்து உரையாற்றினார்.
சென்னையில் பள்ளி விழாவில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள் பெரிதாகக் கனவு கண்டு அச்சமின்றிச் செயல்பட வேண்டும் என்றும், தமிழ் கலாசாரத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




