சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். பட்டறையில் தயாரிக்கும் வெள்ளி பொருட்களை அங்குள்ள தனக்கு சொந்தமான வீட்டில் உள்ள கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த வெங்கடேஷை இரும்புக் கம்பியால் தாக்கி, கயிற்றால் கட்டிப்போட்ட கொள்ளையர்கள் கட்டிடத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். கடையில் இருந்த வெள்ளி நகைகள், பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகளைச் சாக்கு மூட்டைகளில் கட்டி காரில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு காவலாளி கூச்சலிட்டதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததுடன், பதிவுகளைச் சேமிக்கும் கருவிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, போலீசார் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். சேலம் மாநகர போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சேலத்தில் 600 கிலோ வெள்ளி கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
சேலத்தில் வெள்ளிக் கடையில் புகுந்த மர்ம கும்பல், காவலாளியைக் கட்டிப்போட்டு 600 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
சேலத்தில் வெள்ளிக் கடையில் புகுந்த மர்ம கும்பல், காவலாளியைக் கட்டிப்போட்டு 600 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
