சென்னை ஆவடி பகுதியில் சமூக வலைதளங்களில் ஆன்லைன் டிரேடிங் பயிற்சி மற்றும் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் அதிக லாபம் ஈட்டியதாகக் காட்டும் வீடியோக்கள் மூலம் பொதுமக்களை நம்ப வைத்து, அவர்களிடம் பணம் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது. பயிற்சிக்காக ஒருவரிடம் ரூ.40,000 வரை கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆவடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மோசடியில் தொடர்புடைய கவின்பிரசாந்த், கீர்த்திவாசன், பார்த்திபன் மூன்று பேரைக் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் முதலீட்டு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும். ஆன்லைன் பண மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி ஆன்லைன் வர்த்தக விளம்பரம் மூலம் ரூ.6கோடி பண மோசடி - மூவர் கைது
சென்னை ஆவடி பகுதியில் போலி ஆன்லைன் வர்த்தக விளம்பரங்கள் மூலம் ரூ.6 கோடி பண மோசடி செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி பகுதியில், ஆன்லைன் டிரேடிங் பயிற்சி மூலம் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, ஒருவரிடம் ரூ.40,000 வரை வசூலித்ததாக எழுந்த புகாரில் கவின் பிரசாந்த், கீர்த்திவாசன், பார்த்திபன் ஆகிய மூவரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு முன் விளம்பரங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், மோசடிக்கு ஆளானால் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Team - Editorial

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




