தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்என்பவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதில் சிறுமி 8 மாத கர்ப்பமானார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி எழில், ஜெயபிரகாஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இதேபோல், உத்தமபாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், 2023-ல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த 17 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், காளீஸ்வரனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
தேனியில் போக்சோ வழக்கில் இருவர் கைது
தேனியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஜெயபிரகாஷ், காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




