கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவின் ஆதரவாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆர்த்திம் இன்று இரவு அவரது இல்லத்திலிருந்து தனியாகச் சென்று கொண்டிருந்ததார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆர்த்திம், ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, மருத்துவமனைக்குச் சென்று ஆர்த்திமின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரையில் தவெக நிர்வாகி மீது கத்திக்குத்து
ஊத்தங்கரையில் தவெக நிர்வாகி ஆர்த்திம் மீது மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஊத்தங்கரையில் தவெக நிர்வாகி ஆர்த்திம் மீது மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
