ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் படமட்டாவைச் சேர்ந்தவர் நாக சவுமியா. இவரது காதலன் காசிவர்தன். இவர் 3 மாதங்களுக்கு முன்பு சித்தூரில் போதைப்பொருள் விநியோகம் செய்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் வெளியே எடுக்க நாக சவுமியாவிடம் பணம் இல்லை. இதையடுத்து, கிருஷ்ணலங்காவைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி பஷீரை அவர் சந்தித்தார். பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தால் ரூ.1 லட்சம் தருவதாக பஷீர் கூறியதுடன், முன்பணமாக ரூ.50 ஆயிரமும் வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி பெங்களூரு சென்ற நாக சவுமியா, அங்கு 110 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் இரயிலில் விஜயவாடா புறப்பட்டார். இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, இரயிலில் சோதனை நடத்திய போலீசார் நாக சவுமியாவைப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலனை ஜாமீனில் எடுக்க போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது
காதலனை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த நாக சவுமியாவை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து 110 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை ரெயிலில் கடத்தி வந்தபோது அவரைப் பிடித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




