உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

போக்குவரத்து சிக்னல் தடுப்பில் கார் மோதி 3 வாகனங்கள் சேதம்

அம்பத்தூர் அருகே போக்குவரத்து சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

சென்னை அம்பத்தூர் அருகே போக்குவரத்து சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் காயமடைந்தனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
போக்குவரத்து சிக்னல் தடுப்பில் கார் மோதி 3 வாகனங்கள் சேதம்

சென்னை அம்பத்தூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது சொகுசு காரில் வீட்டிலிருந்து கள்ளிக்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து சிக்னல் பகுதியில் காரை நிறுத்துவதற்காக பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாக, தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து, புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு லேசான காயமடைந்தனர். இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் அபாயம் நிலவியது. மேலும், இச்சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
போக்குவரத்து சிக்னல் தடுப்பில் கார் மோதி 3 வாகனங்கள் சேதம் | விசில் மீடியா