உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்

பிரசவத்திற்குப் பிறகு பெண் உயிரிழந்ததால், மருத்துவர்களின் கவனக்குறைவைக் கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பிரசவத்திற்குப் பிறகு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவே மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள், உரிய விசாரணை கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். பிரசவத்திற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் ஐஸ்வர்யாவுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும், மருத்துவர்களின் கவனக்குறைவே மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம் | விசில் மீடியா