நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஆர்.பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.மாணிக்கம். இவர் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை ரவீந்திரன். இவர் விவசாயத்திற்குத் தேவையான கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளைத் தயாரித்து வந்துள்ளார். தந்தையின் தொழிலால் ஈர்க்கப்பட்ட மாணிக்கம், குடும்பத் தொழிலில் புதுமையைப் புகுத்த முடிவு செய்தார். இதையடுத்து கடைசல் இயந்திரத்தின் உதவியுடன் ஆட்டுக்கல், உரல், குந்தாணி, உலக்கை, ஏர்கலப்பை உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களை மரத்தில் தயாரித்து வருகிறார். மேலும், யோகா மற்றும் உடற்பயிற்சிக்குத் தேவையான பொருட்களையும் உருவாக்குகிறார். வாகை, வேலம், செங்காளி உள்ளிட்ட உறுதியான மரங்களைப் பயன்படுத்தி தரமான பொருட்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் இவரது தயாரிப்புகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், படித்து முடித்து விட்டு வேலை தேடுவதற்குப் பதிலாக, பாரம்பரியத் தொழிலில் நவீனத்தைப் புகுத்தி சுயதொழிலில் சாதித்து வரும் மாணிக்கத்தின் முயற்சி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
பட்டப்படிப்பு முடித்து பாரம்பரியத் தொழிலில் சாதனை - மரத்தால் கலைப்படைக்கும் ராசிபுரம் இளைஞர்!
இராசிபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மாணிக்கம், நவீன இயந்திரங்கள் மூலம் பாரம்பரிய மரப்பொருட்களைத் தயாரித்து சுயதொழிலில் சாதித்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மாணிக்கம், குடும்பத் தொழிலில் புதுமையைப் புகுத்தி கடைசல் இயந்திரம் மூலம் உரல், உலக்கை உள்ளிட்ட பாரம்பரிய மரப்பொருட்களைத் தயாரித்து தமிழ்நாடு, கேரளாவில் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




