உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நிருபருக்கு பாதுகாப்பு தர விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

சட்டவிரோத கால்நடை கடத்தலுக்கு துணைபோகும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், செய்தியாளர் வினோத்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கால்நடை கடத்தல் கும்பலுக்கு உதவும் காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடத்தல் கும்பலை கைது செய்யவும், செய்தியாளர் வினோத்குமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நிருபருக்கு பாதுகாப்பு தர விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

தமிழ்நாட்டில் சட்டவிரோத கால்நடை கடத்தல் கும்பலுக்கு துணை போகும் காவல்துறையினர் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஸ்வ இந்து பரிஷத் தென் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடமாநிலங்களில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் வழியாகக் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோத்குமார் தலைமையிலான குழுவினர் உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் ரகசிய குடோன்களில் மாடுகள் அடைக்கப்பட்டு, RR என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்டெய்னர்கள் மற்றும் சரக்கு லாரிகள் மூலம் கடத்தப்படுகின்றன. இதனை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்த செய்தி குழுவினர் 100 கிலோ மீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தில் கடத்தல் வாகனங்களை ஒப்படைத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல், செய்தியாளர்களின் கவனத்தை திசை திருப்பி கடத்தல் வாகனங்களை அங்கிருந்து தப்பிக்க விட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, மேட்டூர் காவலர் சண்முகசுந்தரம் செய்தியாளர் வினோத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, கடத்தல் கும்பலை கைது செய்யவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் மற்றும் செய்தியாளர் வினோத் குமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் விஸ்வ இந்து பரிஷத் தென் தமிழ்நாடு அமைப்பினர் அறிக்கை வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50