உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நாகர்கோவிலில் கார் மோதி 25 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி

நாகர்கோவிலில் கார் மோதி பாலத்திலிருந்து 25 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தில் கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மணிகண்டன் 25 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நாகர்கோவிலில் கார் மோதி 25 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு குடும்பத்துடன் காரில் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தில் சென்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாத்தியார்விளையைச் சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் என்பவரது வாகனத்துடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணிகண்டன் இருசகர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சுமார் 25 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தலைக்கவசம் அணிந்திருந்ததால் தலையில் பெரிய காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50