உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தென்காசியில் யானை – மனித மோதலைத் தடுக்க வனத்துறையின் சிறப்புப் பயிற்சி முகாம்

மனித – யானை மோதலைத் தடுக்க தென்காசி வனத்துறையினர், பணியாளர்களுக்கு இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தினர்.

தென்காசியில் மனித – யானை மோதலைத் தடுக்கவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்துறைப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, மீட்பு மற்றும் அவசரகால மேலாண்மைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தென்காசியில் யானை – மனித மோதலைத் தடுக்க வனத்துறையின் சிறப்புப் பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டத்தில் மனித – யானை மோதல் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில், வனத்துறைப் பணியாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் R. ராஜ்மோகன், IFS வழிகாட்டுதலின்படி, உதவி வனப் பாதுகாவலர் நெல்லைய நாயகம் மற்றும் புளியங்குடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் ஒருங்கிணைப்பில் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், மனித – வனவிலங்கு மோதலைத் தடுத்தல், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தல், வனவிலங்கு மீட்பு, முதலுதவி, மனித மீட்பு, வனத் தீ மேலாண்மை மற்றும் அவசரகால ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செயல்விளக்கத்துடன் வழங்கப்பட்டன. வனத்துறைப் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று களப்பயிற்சி பெற்றனர். இத்தகைய முயற்சிகள் மூலம் மனித உயிர்களையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து, மோதல்களைக் குறைக்க முடியும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தென்காசியில் யானை – மனித மோதலைத் தடுக்க வனத்துறையின் சிறப்புப் பயிற்ச | விசில் மீடியா