தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி அருகே அமைந்துள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வருவதுடன், முறையாக தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெளிநபர்கள் யாரேனும் அந்தப் பகுதிக்கு வந்தால் நாய்கள் குரைத்து எச்சரிக்கை விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் சிலர் தெருநாய்களுக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலந்து வைத்துள்ளனர். இதனைச் சாப்பிட்ட இரண்டு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மேலும், ஒரு நாய் ஆபத்தான நிலையில் இருந்தது. அதேபோல், விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட எட்டு காகங்களும் உயிரிழந்துள்ளன. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த நாய்களைப் பரிசோதித்ததுடன், ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்கும் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விலங்கு நல ஆர்வலர்கள், நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்டு 2 தெருநாய்கள், 8 காகங்கள் உயிரிழப்பு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடியில் விஷம் வைத்து தெருநாய்கள் கொலை 2 நாய்கள், 8 காகங்கள் உயிரிழப்பு தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் விஷம் வைத்து 2 நாய்கள், 8 காகங்கள் கொலை! மத்திய அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




