திண்டுக்கல் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி -20-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது கோவில் புனரமைப்பு பணிகளுக்காக எடுத்து வைக்கப்பட்ட கருடாழ்வார் சிலை, அம்மன் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மீண்டும் கோவிலில் வைக்கப்படவில்லை. இது குறித்து ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று ராஜாவை திண்டுக்கல் சிலை திருட்டு தடுப்பு விரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து ராஜா மாயமான சிலைகள் குறித்த புகைப்பட ஆதாரங்கள் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் பழமையான சிலைகள் மாயம் – போலீசார் விசாரணை
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் பழமையான சிலைகள் மாயமானதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, புகார் அளித்த ராஜாவிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான கருடாழ்வார் சிலை, அம்மன் வாகனங்கள் உள்ளிட்ட சிலைகள் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார்தாரர் ராஜாவிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




