கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் குற்றம் சாட்டினார். தவெக நிர்வாகிகள் போராட்டங்கள், மோதல்களில் ஈடுபடுவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். மதுபான பாட்டிலுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்டதற்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார். ரூ.3,767 கோடி முதலீட்டில் 4,853 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பில் நிறுவன விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் விமர்சித்தார். மேலும், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது, செஞ்சி சிறுமி சம்பவம், தேனி சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பினார். தமிழக அரசு முறையான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு – கே.பி.முனுசாமி விமர்சனம்
கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தவெக விஜய் ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தவெக விஜய் ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். மின்சாரக் கொள்முதல் மற்றும் மதுபான விலை உயர்வுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




