தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீடு வீடாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களில் சிலர் குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்காமல் சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டி வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பொது இடங்களில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி முதல் நகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நகராட்சி தூய்மை அலுவலர் ராஜரத்தினம் தலைமையில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல், வீடு தேடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தர்மபுரியில் அக்., 1 முதல் சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்
தர்மபுரியில் அக்., 1 முதல் சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிரடி உத்தரவு விடுத்துள்ளது.
தர்மபுரி நகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, அக்டோபர் 1 முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? . Verified changes are recorded transparently.




