தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா புறையூர் கிராமத்தில் கச்சனாவிளை பகுதியில் 300 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நத்தம் பகுதியில் அந்த கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தர்கா அமைத்து குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்தை கையகப்படுத்தி இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புறையூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கச்சனாவிளை பகுதியில் 300 ஆண்டுகளாக உள்ள தர்காவை பாதுகாக்கக் கோரி அந்த இடத்தில் பிற சமூகத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், வீடில்லாத 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு அதே பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடியில் தர்கா இடத்தை பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு
தூத்துக்குடி கச்சனாவிளை பகுதியில் தர்கா இடத்தை பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு அளித்துஉள்ளனர்.
புறையூர் இஸ்லாமியர்கள், 300 ஆண்டுகள் பழமையான தர்கா இடத்தை பாதுகாக்கவும், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




