அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்க முதலமைச்சர் விஜய் இன்று காலை மதுரைக்கு வருகை தந்தார். மதுரை வந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து, வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி ரோடு ஷோவில் பங்கேற்றார். பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார். இதையடுத்து, ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அங்கு காந்தி பயன்படுத்திய கண்ணாடி உள்ளிட்ட பொருட்களையும், டிஜிட்டல் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
மதுரையில் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
மதுரையில் முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைத்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




