அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தில் உள்ள தாமரை செடி படர்ந்த பெரிய ஏரியில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிமடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏரியில் தவறி விழுந்த நபரை தேடினர். ஏரியின் நடுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்த உடலை மீட்டு ஏரியின் கரைக்கு தீயணைப்பு துறையினர் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் கடலூர் மாவட்டம் தண்டபாணி நகரை சேர்ந்த செல்வம் என்பதும் அவர் தாமரைப்பூ அல்லது தாமரை இலை பறிப்பதற்காக ஏரியில் இறங்கியதில் தடுமாறி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்டு உடல் உடற்கூறாய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் : ஏரியில் இருந்து வாலிபர் சடலம் மீட்பு
ஆண்டிமடம் அருகே ஏரியில் இருந்து வாலிபர் சடலம் மீட்பு. தாமரைப்பூ பரிக்கச் சென்றபோது உயிரிழந்த சோகம்.
அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தில் உள்ள தாமரை செடி படர்ந்த பெரிய ஏரியில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிமடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
Chief Editor
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




