தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி வட்டக்கிளை தலைவர் காமராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களை முறையாக நியமிக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின்வாரிய தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.மேலும், மின்வாரிய ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தேனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17 கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Visil Administrator
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

