நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திமாநகர் பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை பராமரிப்பு பணியின்போது அகற்றப்பட்ட சில குழாய்கள் சீரமைக்கப்படாமல் இருந்ததால் குடிநீர் வினியோகம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நேற்று தேவாலா-உப்பட்டி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் கவுன்சிலர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குழாய்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு குடிநீர் முறையாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி குடிநீர் பணியாளர்கள் குழாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சனை காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதிப்பு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அத்திமாநகரில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால், மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க நகராட்சி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




