சென்னை எண்ணூர் பகுதியில் சிறுமி வீட்டிலிருந்து கடைக்குச் சென்றபோது மாயமானார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் எண்ணூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. அந்த விசாரணையில், சிறுமி கீழ்திருப்பதியில் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். இதையடுத்து, ராமகிருஷ்ணனை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்தார். பின்னர், இந்த தீர்ப்பின் அடிப்படையில், ராமகிருஷ்ணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் 13 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ராமகிருஷ்ணன் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




