தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், நியூ பாபா நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மனைவி அஜ்மீரா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி அஜ்மீரா வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த முஸ்தபா, தனது மூன்று குழந்தைகள் கண் முன்னே மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அஜ்மீராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, தப்பிச் சென்ற முஸ்தபாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீசைலம் சாலையில் போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் கண் முன்னே மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை - கணவர் கைது
தெலுங்கானாவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மூன்று குழந்தைகள் கண் முன்னே அவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.
தெலுங்கானாவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மூன்று குழந்தைகள் கண் முன்னே அவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




