நீலகிரி மாவட்டம் கூடலூர் தொரப்பள்ளி அருகே உள்ள கோடமுலா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டன். இவரது மனைவி கீதா. இந்நிலையில், கீதா நேற்று காலை வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், குட்டனை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இரவு குட்டன், அவரது மனைவி கீதா மற்றும் நண்பர் கண்ணன் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் கண்விழித்த குட்டன், தனது மனைவியும் நண்பர் கண்ணனும் வீட்டிற்குள் நெருக்கமாக இருப்பதைக் கண்டார். இதையடுத்து, நண்பர் கண்ணன் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் குட்டனுக்கும் கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில், கோபமடைந்த குட்டன், கீதாவின் தலையைப் பிடித்துச் சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கூடலூர் அருகே மனைவியைக் கொலை செய்த கணவர் கைது
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே மனைவியின் தலையைச் சுவரில் மோதிக் கொலை செய்ததாகக் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் தலையைச் சுவரில் மோதிக் கொலை செய்ததாகக் கணவர் குட்டனை போலீசார் கைது செய்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
