கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் – பேரூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் கள்ளநோட்டுகளைக் கொடுத்து மதுபாட்டில்கள் வாங்க முயன்றபோது ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசாருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மதுரையில் இருந்து கள்ளநோட்டுகளைப் பெற்று கோவையில் புழக்கத்தில் விட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரைக் போலீசார் கைது செய்து உள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் ரூ.1.86 லட்சம் மதிப்பிலான 372 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இந்தச் செயல்களில் இன்னும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், எவ்வளவு காலமாக இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ரூ.1.86 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் – 6 பேர் கைது
கோவையில் கலர் ஜெராக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ரூ.500 கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கலர் ஜெராக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ரூ.500 கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.86 லட்சம் மதிப்பிலான 372 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




