உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சென்னை இரயிலில் வெடித்து சிதறிய செல்போன் பவர் பேங்க் - அலறியடித்த பயணிகள்

சென்னை நோக்கி வந்த இரயிலில் பயணியின் பவர் பேங்க் திடீரென வெடித்ததால் பயணிகள் அலறியடித்தனர். இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணி ஒருவரின் செல்போன் பவர் பேங்க் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். இரயிலை நிறுத்தி இரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சென்னை இரயிலில் வெடித்து சிதறிய செல்போன் பவர் பேங்க்: அலறியடித்த பயணிகள்

கர்நாடக மாநிலம், பெங்களூர் இரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று இரவு பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் இரயில் புறப்பட்டது.அந்த இரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி அருகே இரவு 10.40 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டியில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனை பவர் பேங்கில் சார்ஜ் போட்டார். திடீரென அந்த பவர் பேங்க் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.இரவு நேரம் என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இது குறித்து பயணிகள் காட்பாடி இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.காட்பாடி இரயில் நிலையத்திற்கு வந்ததும் இரயிலை நிறுத்தி இரயில்வே போலீசார் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, பவர் பேங்க் வெடித்ததில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.இதையடுத்து சிறிது நேர இடைவெளிக்கு பிறகு இரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
சென்னை இரயிலில் வெடித்து சிதறிய செல்போன் பவர் பேங்க்: அலறியடித்த பயணிக | விசில் மீடியா