உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு

குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வி.ராமாபுரம் கிராமத்தில் கங்காதரனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தொழிலாளர்கள் தினைப் பயிரை அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கோழியை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் பிரதீப் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.கோழியை விழுங்கியதால் மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்தது. அதை உடனடியாகப் பிடிக்காமல், சிறிது நேரம் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர், மலைப்பாம்பு நகரத் தொடங்கியதும் அதை வனத்துறையினர் மெதுவாக பிடித்தனர். இதை தொடர்ந்து, 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை அருகிலுள்ள அனுப்புக்காட்டில் பாதுகாப்பாக வனத்துறையினர் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு | விசில் மீடியா