சென்னை கொரட்டூர் தெருவில் உள்ள ரேஷன் கடையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவருக்கு ஆயில் பாக்கெட் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், சொந்த ஊரில் ஆயில் கிடைக்காததால் கொரட்டூர் ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது முதல் கடையில் ஊழியர் ஆயில் இருப்பு இல்லை எனக் கூறி வழங்க மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அருகிலுள்ள இரண்டாவது ரேஷன் கடையில் அவர் ஆயில் வாங்கியுள்ளார். பின்னர் முதல் கடைக்குச் சென்று கேட்டபோது, இருப்பு இல்லை எனக் கூறிய ஊழியரிடம் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயில் பாக்கெட்டுகளைக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா என விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரட்டூர் ரேஷன் கடையில் வெளிமாவட்ட இளைஞருக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்
கொரட்டூர் ரேஷன் கடையில் ஆயில் பாக்கெட் மறுப்பு; ஊழியரிடம் இளைஞர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை கொரட்டூர் ரேஷன் கடையில் திருச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயில் பாக்கெட் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




