தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கழிவுகளைக் கொட்டிச் சென்றதாக நிலத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் உத்தரவின் பேரில், சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திம்மராஜ் கழிவுகளைக் கொட்ட இடம் ஏற்பாடு செய்த ஆட்கொண்டார் குளத்தைச் சேர்ந்த முருகன் கழிவுகளை இறக்க வந்த திருமலைச்சாமி புரோக்கராகச் செயல்பட்ட முருகன் என்ற வெள்ளத்துரை ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், லாரியையும் பறிமுதல் செய்தனர். பிற மாநிலங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிய 4 பேர் கைது - லாரி பறிமுதல்
கேரளாவில் இருந்து தென்காசிக்கு கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து லாரியைப் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் கேரளாவில் இருந்து லாரியில் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டியதாக ஓட்டுநர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




