உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குப்பைக் கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி

நெமிலிச்சேரி ஏரி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயம் அதிகரித்து பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளின் குப்பைகள் நெமிலிச்சேரி ஏரியில் கொட்டப்படுவதால் ஏரி மாசடைந்து, துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியை சீரமைக்க பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
குப்பைக் கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே அமைந்துள்ள நெமிலிச்சேரி ஏரி தற்போது குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறி வருகிறது. இந்த ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. ஆனால், திருநின்றவூர், பட்டாபிராம், பாக்கம், பெருமாள்பட்டு, நடுக்குத்தகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஏரியின் கரையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து, அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுத்தமான சுற்றுச்சூழலை எதிர்பார்த்து இப்பகுதியில் குடியேறிய மக்கள் தற்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், ஏரியை முறையாக சீரமைத்து, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் அழகிய பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
குப்பைக் கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி | விசில் மீடியா