கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நாராயண நகர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நான்கு தற்காலிகத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மன் கோயில் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார், தொட்டியைச் சுத்தம் செய்யும் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து தொழிலாளி பலி
ஊத்தங்கரை பகுதியில் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்த போது தவறி விழுந்த தொழிலாளி தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார். பின்னர், போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




