திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலையில் உள்ள அணைப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மது அருந்துவதற்காக மருது என்பவர் அங்கு சென்றுள்ளார்.அப்போது மது விற்பனை செய்தவர்களுக்கும், மருதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முருகனுடன் வேலை செய்யும் நபர்களும், புதுப்பட்டியைச் சேர்ந்த ஒருவரும் சேர்ந்து மருதுவிடம் சமரசம் பேச வேண்டும் எனக் கூறி அவரை முருகனின் சொந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு மருதுவை அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மருதுவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சந்தை மது விற்பனை தகராறில் அரிவாள் வெட்டு
திண்டுக்கல் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் மருது என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அணைப்பட்டி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது வாங்கச் சென்ற மருதுவுக்கும் விற்பனையாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மருதுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




