உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

தூத்துக்குடி கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, 4.1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோமஸ்புரம் சுடுகாடு அருகே சந்தேகத்தின் பேரில் 5 பேரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகர் இந்திரா நகரைச் சேர்ந்த ரீமஸ், கிஷோர், துரைசிங் நகரைச் சேர்ந்த அஜய் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காக 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, அவர்களிடமிருந்த 4 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50