உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

விலை உயர்ந்த செல்போன்களை திருடி ஸ்வீட் பாக்ஸ் வைத்த டெலிவரி ஊழியர் கைது

சென்னையில் பார்சலில் அனுப்பப்பட்ட இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை திருடி ஸ்வீட் பாக்ஸ் வைத்த டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்து செல்போன்களை மீட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ரேபிடோ மூலம் அனுப்பப்பட்ட இரண்டு செல்போன்களை அகரம் சந்திப்பு அருகே திருடி, ஸ்வீட் பாக்ஸ் வைத்த டெலிவரி ஊழியர் மனிஷ்குமாரை போலீசார் கைது செய்து செல்போன்களை மீட்டனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
விலை உயர்ந்த செல்போன்களை திருடி ஸ்வீட் பாக்ஸ் வைத்த டெலிவரி ஊழியர் கைது

சென்னை மண்ணடி சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் சையத் அப்ரிடி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், திரு.வி.க. நகர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வியாபார கூட்டாளி நுங்கம்பாக்கத்தில் இருந்து ரேபிடோ இருசக்கர வாகன சேவை மூலம் 2 செல்போன்களை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். பார்சலை பெற்ற சையத் அப்ரிடி பிரித்துப் பார்த்த போது, அதில் செல்போன்களுக்கு பதிலாக ஸ்வீட் பாக்ஸ் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வியாசர்பாடியைச் சேர்ந்த மனிஷ்குமார் என்பவர் செல்போன்களை திருடியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் செல்போன்களை மீட்டனர். பின்னர், விசாரணையில், அகரம் சந்திப்பு அருகே பார்சலை பிரித்து செல்போன்களை திருடி விட்டு ஸ்வீட் பாக்ஸை வைத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50