உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

அம்பத்தூர் : கஞ்சா செடி வளர்த்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அம்பத்தூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் தனியார் காலி இடத்தில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் அகற்றினர். அவற்றை வளர்த்த மர்ம நபர்களைக் கண்டறிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
அம்பத்தூர் :  கஞ்சா செடி வளர்த்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் பகுதியில் உதவி கமிஷனர் குமார் தலைமையிலான போலீசார், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கல், விற்பனை தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.அந்த இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஒன்றரை அடி உயரத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை போலீசார் அகற்றினர். மேலும், இந்த இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்களைக் கண்டறிய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50