உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

களியக்காவிளை அருகே மாயமான நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

களியக்காவிளை அருகே மாயமான நர்சிங் மாணவி அபர்ணா, காதலன் அபிசேக்குடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தாயுடன் செல்ல மறுத்ததால் காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

களியக்காவிளை அருகே கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பாத நர்சிங் மாணவி அபர்ணா, காதலன் அபிசேக்குடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்த மாணவி காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
களியக்காவிளை அருகே மாயமான நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் காவல்  நிலையத்தில் தஞ்சம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இளந்தோட்டுவிளை மலையடி பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா. இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனது தாயின் குடும்ப வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற அபர்ணா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர். இதையடுத்து, மாணவி அபர்ணா குலசேகரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலன் அபிசேக்குடன் களியக்காவிளை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து வந்த குடும்பத்தினர், தாயுடன் செல்ல மாணவி மறுத்ததால், போலீசார் விசாரணைக்குப் பிறகு காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50