கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ECG, ECHO பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் நிபுணர்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் தனியார் மையங்களுக்கும், 40 கி.மீ. தொலைவில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நரம்பியல் மருத்துவர்கள் இல்லாததால் அத்துறை சார்ந்த நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எக்ஸ்ரே எடுக்க ரூ.50 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ. 2,500 வசூலிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்குப் பயன்படுத்த வெறும் இரண்டு வீல்சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர் டிராலிகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே மருத்துவமனையில் ECG, ECHO கருவிகளை நிறுவி, நிபுணர் மருத்துவர்களை நியமிக்கவும், பரிசோதனைகளை இலவசமாக வழங்கவும், கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை – நோயாளிகள் அவதி
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ECG, ECHO வசதி, நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ECG, ECHO பரிசோதனை வசதிகள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் வீல்சேர் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




