உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கடலூரில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கடலூர் சிப்காட் விரிவாக்கத்திற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி, அரசாணையைத் திரும்பப் பெறக் கோரினர்.

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி, அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கடலூரில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கடலூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 1,100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு, சித்திரப்பேட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்காள விரிகுடா கடற்கரையில் கருப்புக்கொடிகளை ஏந்தி மனித சங்கிலிப் போராட்டம் நடத்திய அவர்கள், பின்னர் கடலில் இறங்கியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிப்காட் விரிவாக்கத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணை 165-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாகவும், பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயம், மீன்பிடித் தொழில் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். போராட்டத்தின் போது கடலில் இறங்கியவர்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விளைநிலங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
கடலூரில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடலில் இறங்கி பொதுமக்கள் போ | விசில் மீடியா