உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஓசூர் அருகே அரசு மேய்ச்சல் நிலம் மீட்பு

ஓசூர் அருகே புனுமந்தொட்டி கிராமத்தில் அரசு மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை வருவாய்த்துறையினர் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே புனுமந்தொட்டி கிராமத்தில் அரசு மேய்ச்சல் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை, வட்டாட்சியர் ஜெயசீலன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் ஜேசிபி மூலம் இடித்து அரசு நிலத்தை மீட்டனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
ஓசூர் அருகே அரசு மேய்ச்சல் நிலம் மீட்பு - ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை ஜேசிபி மூலம் இடித்து அகற்றிய அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புனுமந்தொட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டுவதற்காக சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தனர். இது குறித்து தகவலறிந்த கெலவரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், அரசு நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாமல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஓசூர் வட்டாட்சியர் ஜெயசீலனிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஜேசிபி இயந்திரம் மூலம் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றினர். இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலம் மீட்கப்பட்டது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50