சென்னை, கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகப் பணியாற்றிய முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் 1955-ம் ஆண்டு பிறந்த சி.எஸ்.கர்ணன், 1983-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 2017-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது இயற்பெயர் கருணாநிதி. தனது மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெயரை கர்ணன் என மாற்றிக்கொண்டார். நீதிபதிகளுக்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், பதவியில் இருந்தபோதே சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவரது மறைவுக்கு அக்கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்
சென்னை, கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகப் பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை, கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகப் பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால் சிறை தண்டனையும் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




