சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சனிக்கிழமை அதிகாலை காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில் உள்ள வாணியார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கார் 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சபரீஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்ற 4 பேரும் மீட்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டம் அல்லது அதிவேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்து - இளைஞர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சபரீஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




