உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

எதிர்க்கட்சியினருக்கு ஜெட் வேகம்; தவெகவினருக்கு மட்டும் ஆமை வேகம் - கனிமொழி விமர்சனம்

எதிர்க்கட்சியினரை வேகமாக கைது செய்யும் தவெக அரசு, தனது கட்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மீது ஜெட் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் தவெக அரசு, தனது கட்சி எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தும் கைது செய்யாமல் இருப்பதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
எதிர்க்கட்சியினருக்கு ஜெட் வேகம்; தவெகவினருக்கு மட்டும் ஆமை வேகம் - கனிமொழி விமர்சனம்

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்வதாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், Gen Z DMK அமைப்பில் செயல்பட்ட இளைஞர்கள் தன்னிடம் கேள்வி கேட்டதற்காக இரவு, அதிகாலை என நேரம் பார்க்காமல் கைது செய்யப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், தற்போது தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், அவரை இன்னும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவகின்றனர். பெண்களின் பாதுகாவலர் என்று கூறி வாக்கு பெற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக கனிமொழி தனது பதிவில் விமர்ச்சித்துள்ளார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50