கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், மாவட்ட ஆட்சியர் வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்திருந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கும், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அருள் விக்னேஷ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில், இன்று அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். இதையடுத்து, கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு..? - போலீசார் சம்மன்
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் சிக்கிய அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கிய நிலையில், ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
