தவெக ஆட்சியில் மக்களின் உயிருக்கும், விவசாயிகளின் பயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 11 டி.எம்.சி. பற்றாக்குறை நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததுடன், பருவமழையும் பெய்யாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, விவசாயிகளுக்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை. தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்புமே அவசியம் என்றும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்
தவெக ஆட்சியில் உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பு இல்லை - டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்
தவெக ஆட்சியில் விவசாயிகளின் பயிர்களுக்கும் மக்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சியில் விவசாயிகளின் பயிர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், காவிரி நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




