உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற பள்ளத்தில் தொடரும் விபத்துகள்

ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புத் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் விபத்துகள் தொடர்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் சிக்கி விபத்து ஏற்பட்டது. பாதுகாப்புத் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற பள்ளத்தில் தொடரும் விபத்துகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த வழியாக 6 பேர் பயணம் செய்த கார் ஒன்று சென்றபோது, கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கியது. இதில் காரில் இருந்த 6 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதே பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்புத் தடுப்புகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50