உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

உவரியில் நள்ளிரவில் மீனவர்கள் போராட்டம் – 2 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு

நெல்லை உவரியில் சுருக்குமடி வலை மூலம் பிடித்த மீன்களை எடுத்துச் செல்ல அதிகாரிகள் மறுத்ததால், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அரசு பேருந்துகளைச் சிறைபிடித்தனர்.

நெல்லை மாவட்டம் உவரியில் சுருக்குமடி வலை மூலம் பிடித்த மீன்களைக் கொண்டு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 500 மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அரசு பேருந்துகளைச் சிறைபிடித்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
உவரியில் நள்ளிரவில் மீனவர்கள் போராட்டம் – 2 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு

நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், உவரி மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்திப் பிடித்த மீன்களை 50 மினி லாரிகளில் ஏற்றி விற்பனைக்குக் கொண்டு செல்லத் தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், மீன்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் கோபமடைந்த மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என 500 பேர் ஒன்றுகூடி, அவ்வழியாக வந்த இரண்டு அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், திசையன்விளை வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேருந்துகளும் விடுவிக்கப்பட்டன. மேலும், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கக் கோரி, உவரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50