சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அரசு ஆய்வு மாளிகை அருகே நேற்று இரவு 3 ஆம்னி பேருந்துகள் மற்றும் ஒரு சரக்கு லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
உளுந்தூர்பேட்டையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




