கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவும், இருசக்கர வாகனமும் சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும், இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, காயமடைந்த வர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மேம்பாலத்தில் வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ - இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஓட்டுநர் பலி
உளுந்தூர்பேட்டை இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




