இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், கடற்கரை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் மனோ என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்த போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து மனோவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், கைது செய்யப்பட்ட மனோ மீது ஏற்கனவே 15 கிலோ கஞ்சா தொடர்பான வழக்கு தொண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர். மேலும், கஞ்சா கடத்தலின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு கடத்த முயன்ற 19.8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 19.8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இராமநாதபுரம் பாசிப்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 19.8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மனோ என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




